இன்றைய ராசி பலன்கள் - 8.10.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
ரிஷபம்
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்கள் இடத்தில் விவாதங்கள் தவிர்க்கவும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மிதுனம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
சிம்மம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களை பொறுமை வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
குடும்பத்தில் பொறுப்புக்கள் உயரும். தோற்றப்பொழிவுகள் மேம்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். மனை பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்