·   ·  585 posts
  •  ·  0 friends

புரிதலை விட தெளிதலே முக்கியம்

ஒருவர் தினமும் கோவிலுக்கு ''திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார் அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.

அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி

அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு ???

ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரீங்களே,

உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டாள்.

அதற்கு அந்த மனிதர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

ஆனா,

போயிட்டு, கேட்டு வருவது நன்றாகவே இருக்கு என்றார் !!

கோபமடைந்த மனைவி,

முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க என்றாள்.

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.

மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது,

மனைவி , தினமும் லேட்டா வரீங்க கேட்டா திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க,

என்ன சொன்னாங்கன்னு கேட்டா ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க,

நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரித் தான்!

எதுக்கும் பிரயோஜனம் கிடையாது என்று கொட்டித் தீர்த்தாள்.

அதுக்கு அந்த மனிதர்

நீ சொல்லறது சரிதான்

சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம் ....

ஆனா,

அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு நல்லா சுத்தமாயிடுச்சு அதுபோல ....

திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம் ....

ஆனா,

என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது'ன்னு சொன்னார்.

  • 95
  • More
Comments (0)
Login or Join to comment.