- · 0 friends
வந்து சேர்ந்த சொத்து
கல்யாணத்துக்கு முன்னே உன்னை என்ன கேட்டேன்….
என்ன கேட்டே சொல்லி தொலை…..
சொந்த வீடு இருக்கான்னு கேட்டேன் இல்ல……
ஆமா இருக்கு……ஆனா முழுசா கடனில் இருக்கு…..
கார் இருக்கான்னு கேட்டேன் இல்லையா……
ஆமா இருக்கு….. ஆனா எக்கசக்க due கட்டலே….. அதனாலே புடிங்கிக்கினு போயிட்டாங்க……
தோட்டம் தொறவு இருக்கானு கேட்டேன்…. நியாபகம் இருக்கா…..
ஆமா இருக்கு…. ஆனா அது பக்கத்து வீடு….
தங்கைங்க….எத்தனை பேருன்னு கேட்டேன் இல்லையா…..
ஆமா கேட்டே……ஆனா எல்லாரும் வெளி நாட்டுல இருக்காங்க…..தீபா கண்ணு…..
அப்பா யாரு….. அவரு எங்கேன்னு சொன்னியா…..
அவரு என்னை அனாதையா விட்டுட்டு எங்கேயோ போனாரு……திரும்பி வரலே…..
சரி உனக்கு அம்மா இருக்கிறதா சொன்னியே…. அவங்க எங்கே காணலை…..
அவங்க பத்து வருஷத்துக்கு மேலே நோயாளியா சொந்த காரங்க வீட்டில் இருக்காங்க….
முதல்ல உனக்கு வேலை இருக்கா…..
இப்ப தானே கல்யாணம் ஆச்சி……இனிமேல் தான் தேடணும்……சரி…. இப்ப நான் சில கேள்விகள் உன்னை கேக்கலாமா…..
எனக்கென்ன பயம் இருப்பதை சொல்றேன் சங்கர்….கேளு…..
நீ…. முதல்லே எங்கே வளர்ந்தே…..
அநாதை ஆசிரமத்திலே…..
யாரு உன்னை சேர்த்தது……
எங்க அப்பா…. சித்தி கொடுமையிலே என்னை சேர்த்து விட்டு விட்டு போனதா….. விடுதி காப்பாளர் சொன்னார்…..
உனக்கு சொந்த அம்மா இல்லையா.. ..
அவங்க தவறி போனதாலேஇரண்டாம் கல்யாணம் எங்கப்பா பண்ணிக்கிட்டாரு…..
ஆசிரமத்திலே சேர்ந்த காலம் எப்போது. .. எத்தனைவருஷம் அங்கே இருந்தே…..
ஆறு வயசுலே எங்கப்பா சேர்த்தாரு…. இப்போ வயசு இருபத்து மூணு. ….வருஷம் ரெண்டு தரம் வருவாரு….. என்னை பார்ப்பாரு. …. ஆசிரமத்துக்கு நன் கொடையா பல லட்சங்களை கொடுத்து விட்டு…. என்னைபார்த்து எனக்கு முத்தம் கொடுத்துட்டு அழுதுக்கினே போயிடுவாரு..
இப்ப ஏன் வருவதில்லை….
அது தான் தெரியலே…. ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆகி இருக்குமோ…. அவர் அட்ரஸ் கூட விடுதி காப்பாளருக்கு சொல்லலை… எனக்கும் தெரியாது சங்கர்…. அவரை பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு…. அவரு இருக்காரா….. இல்லை….
தீபா…வாயை மூடு…நீ நினைக்கிற மாதிரி துவும் நடந்து இருக்காது…. ஒரு நாள் உங்கப்பாவை கண்டிப்பா பார்ப்பே…. சரி உனக்கு கல்யாணம் யாரு செய்து வைச்சது…..
உனக்கும் எனக்கும் விடுதி காப்பாளர் செய்து வைச்சாரு….
அப்போ நீயும் அநாதை….. நானும் அநாதை இல்லையா……
ஆமா சங்கர்……
அப்ப…. ஏன் தீபா.. எல்லாம் தெரிஞ்சி இருந்தும் இப்படி வேணுன்னே சண்டை போடுறே….
சும்மா……நாளைக்கே நமக்கு வசதி வாய்ப்பு வந்து, பணக்காரரா ஆயிட்டோம்னு வைச்சிக்க….. அப்ப சண்டை போட தெரியாதே….. அதனாலே இப்பவே இந்த ஒத்திகை சங்கர்…..************(சார் போஸ்ட் குரல் கேட்டு சங்கர் ஒரு தபால் வாங்கி வந்தான்)என்ன சங்கர் போஸ்ட்……
தீபா நமக்கு நல்ல காலம்பொறந்திடுச்சு… ஆவண காப்பாக கவர்மெண்ட்ஆபிலிருந்து. எனக்குசி.ஏ..வேலைக்கு அப்பாய்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு ….
கடவுளே. … இந்த அனாதைகளுக்கு கண்ணைதிறந்துட்டே.. …. நன்றி கடவுளே……
சங்கர். நம்ம வீட்டு முன்னாடி ஒரு காரு வந்து நிக்குது பாரு….
யாரோ பெரியவரு வராரே. … ஆ. …. அப்பா. .. எங்கப்பா சங்கர்.. (தீபாவின்அப்பா வேதாசலம் காரிலி ருந்து இறங்கி வந்து சங்கர்…தீபா இருவரையும் அணைத்து கொண்டு அழுதார்) தீபாவும் அழ……அங்கு சில நிமிடங்கள் மவுனம் நிலவியது….. வேதாசலம் தீபாவின் சித்தி இறந்து விட்டதாக சொன்னார்….. தனக்கு தீபாவை தவிர வேறு வாரிசு ஏதும் இல்லை என கூறி இருவரையும் தன்னுடன் அழைத்து கொண்டார்…. அவ்விரு இளங்குயில்களுக்கு உண்மையில் பெருவாரியான சொத்துகளும் ஆளும் தகுதி இறைவனால் கொடுக்கப்பட்டது….