
இன்றைய ராசி பலன்கள் - 21.10.2025
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிதுனம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
குடும்பத்தாரில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். தீடிர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொல்லை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கும்பம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் மூலம் மனதளவில் சில மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்