
மகத்தான மருத்துகுணம் கொண்ட மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது.
மல்லிகைப் பூவை தலையில் சூடிவந்தால், மன அழுத்தம் குறையும், உடல் சூடும் மாறும்.
பெண்கள் விரும்பிச் சூடும் பூ மல்லிகை. மங்கையரின் கூந்தலில் இடம்பெறும் மல்லிகை, அவர்களுக்கு தனி அழகை தருகிறது. இனிய மணத்தைப் பரப்புகிறது.
அதேநேரம் மல்லிகைப் பூ, மருத்துவ குணங்களும் நிறைந்தது என்று பலருக்குத் தெரியாது. இந்தப் பூவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பல ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.
* வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிவடைவது மட்டுமின்றி, உபாதைகள் உண்டாவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், 4 மல்லிகைப் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர, வயிற்றில் உள்ள கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர, அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
* மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
* வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதைச் சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி, காலை- மாலை என இருவேளை அருந்தி வரலாம். இதனால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.
* மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால், வயிற்று வலி மற்றும் அஜீரணம் நீங்கும்.
மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் என்று கூறப்படுகிறது.
* மல்லிகைப் பூ, பெண்களின் கருப்பை பிரச்சனைகளை சரிசெய்யவும், கருப்பையை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது