·   ·  498 posts
  •  ·  0 friends

வாய்வு தொல்லையை தீர்க்க உதவும் அருமருந்து

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - ஒரு கட்டு (தேவையான அளவு)

மஞ்சள் . - சிறிதளவு

பூண்டுப் பல். - 20

உப்பு. - தேவையான அளவு

செய்முறை :

முதலில் தேவையான அளவு முருங்கைக் கீரையை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பல்லை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தப்படுத்தி ஆய்ந்து வைத்துள்ள முருங்கைக் கீரையை இட்லி பாத்திரத்தில் வைத்து அதில் பூண்டு பல்லையும் சேர்த்து நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு மண் சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றித் தாளித்து அடுப்பை அணைத்து அதில் நீராவியில் வேகவைத்த முருங்கைக் கீரை மற்றும் பூண்டு பல்லைச் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு கலந்து பொறியலாக தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள் :

நாட்பட்ட வாய்வுச் சார்ந்த குறைபாடுகளால் துன்பப்படுபவர்களுக்கு அதிலிருந்து குணமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் அற்புதமான கீரை.

சாப்பிடும் முறை :

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள முருங்கைக் கீரை பூண்டுப் பொரியலை ஒரு வேளை உணவாகவே எடுக்கவும். ஒருநாள் விட்டு ஒரு நாள் என 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன் :

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு :

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் காய்ந்த மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  • 524
  • More
Comments (0)
Login or Join to comment.