·   ·  1595 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 12.5.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளிவட்டத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் இனம் புரியாத சில புதிய தேடல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சிம்மம்

எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடம் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நயமான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

அரசு வழியில் இருந்த தாமதம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மகரம்

புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

கும்பம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகளை குறைப்பதற்கான சூழல்கள் அமையும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 350
  • More
Comments (0)
Login or Join to comment.