·   ·  864 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 15.1.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமுக பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மிதுனம்

எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அணுகுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

கடகம்

அரசு பணிகளில் சாதகமான சூழல்கள் அமையும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கமிஷன் துறைகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

சிம்மம்

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் பிறக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கன்னி

மாறுபட்ட அணுகுமுறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழகும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

விருச்சிகம்

எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வரவில் இருந்த நெருக்கடிகள் ஓரளவு குறையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

அரசு செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் நெருக்கடியால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இலக்குகளை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். குறுகிய பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

  • 89
  • More
Comments (0)
Login or Join to comment.