·   ·  1017 posts
  •  ·  0 friends

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

விஷக்கடிக்கு அடர்நிற வெற்றிலையை மென்று விழுங்கலாம் .

வெற்றிலையை நீரில் ஊற வைத்து , அந்த நீரைக் குடிப்பது , மலச்சிக்கலை குறைக்கும் . இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும்போது , மன அமைதி கிட்டும் .

ஒரு வெற்றிலை , ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால் , வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும் .

காரம் - வெற்றிலை , - துவர்ப்பு - பாக்கு , கால்சியம் - சுண்ணாம்பு . இந்த மூன்று சுவைகளும் சேரும் போது , பல் உறுதியிலிருந்து , மூக்கு ,வயிறு , தலை என .

முழு உடல் சம்பந்தப்பட்ட பல சங்கடங்களுக்கு தீர்வாய் அமைகிறது . ஒரு சின்ன வெற்றிலையில் நீர்சத்து , புரோட்டீன் , கொழுப்பு , மினரல் , நார்சத்து , கால்சியம் , கார்போஹைட்ரேட் , வைட்டமின்கள் , பொட்டாசியம் என , இன்னும் நிறைய இருக்கிறது .

வெற்றிலை கஷாயம் : வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி , நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு , கிராம்பு , சுக்கு பொடி சேர்க்கவும் .

தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும் . இந்த கஷாயத்தை குளிரவைத்த பிறகு வடிகட்டி குடிக்கவும் . இதனால் , பல நோய்கள் குணமாவதாக , ஆயுர்வேதம் கூறுகிறது .

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.