உடலில் வாயு ஏற்பட என்ன காரணம்?
வாயு உருவாவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை உள்ளடக்கிய செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவை மட்டுமல்ல, கந்தகம் நிறைந்த உணவுகள், சிக்கலான சர்க்கரை, ராஃபினோஸ் மற்றும் சர்க்கரை ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் நம் உடலில் வாயுவை ஏற்படுத்தும். எனவே, உடைக்க கடினமாக இருக்கும் அந்த உணவுகள் தான் அதிகமாக வாயுவை வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணம்.
என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
வாயு வெளியேறும் அசெளகரியத்தை நீங்கள் உணர விரும்பவில்லை என்றால், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், வேர் காய்கறிகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஒயின் மற்றும் பீர் போன்றவற்றில் கூட கந்தகச் சத்து அதிகம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
வாயுவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
இது மிகவும் எளிமையானது. ஒருவர் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசும்போது, உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் காற்றை விழுங்குவது குறைவாக இருக்கும். அது நம் உடலில் வாயுவை உண்டாக்கும்