·   ·  1883 posts
  •  ·  0 friends

தோழி சொன்ன யோசனை

வாடி கமலா எப்படி இருக்கே….

ஏதோ இருக்கேண்டி……நீ எப்படி இருக்கே…..

அது ஏன் கேக்குறே….. என் சம்மந்தி,வீடு ஏறி வந்து கத்திட்டு போறாடி.,..

எதுக்கு….

என் பொண்ணுக்கு பத்துசவரன் போடறே ன்னுசொல்லிட்டு மூணு தானே போட்டேன்….. மீதி ஏழு சவரன் போட சொல்லி ஒரே சண்டை போட்டுட்டு போறாடி….

தங்கம் விக்கிற வெலைக்கு…நீ எப்படிடி போடுவே…..

அதுதான்டிபுரியலே….

நான் ஒண்ணு சசொல்றேன் செய்றியா……

சொல்லேண்டி…

நம்ம முருகன் கோவில் உள்ளே ஒரு சித்தர்உட்கார்ந்து இருக்கிறார்……அவர் கிட்ட போயி இதைபற்றி சொல்லி முறையீடு செய்….. அவர் சில யோசனைகளை சொல்லுவார்…. அதன் படி செய்……

உனக்கு முன்னாடி அவரிடம் போய் கேட்டாச்சி…..

என்ன சொன்னார்….

சித்தர் சாமி…..என் சம்மந்தி இது போல டார்ச்சர் செய்யரா…. ஏதாவது வழி இருந்தா சொல்ல்லுங்கன்னு வெத்தல பழம் ஒருஎலுமிச்சை கொண்டு போனேன்…..

ஏதாவது சொல்லியிருப்பாறே……

முதலில் ஹா……ஹா… ஹாஎன சிரிச்சாரு….. அப்பாலே..,.உன் ராசிக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்கு….. நவ கிரகங்களை டெய்லிவந்து சுத்திட்டு ஏழு மணி சீரியலை சன் டிவி யில் போய் பாரு அதில் நான் வருவேன்….. இது போல பிரச்சனைக்குஎன்ன பரிகாரம் முன்னு…. பொண்ணு அம்மாவுக்கு நான் ஒரு பரிகாரம் சொல்வேன்…அதை கேட்டுட்டு போய் அது போல்செய்யுன்னுசொன்னாருடி…..

நீ செஞ்சி பார்த்தியா…..

செஞ்சேனே…..

அதுக்கு அப்புறம்போயி 550ரூபாய் செலவு பண்ணி நீங்க சீரியல்லே எப்படி சொன்னிங்கலோ அப்படி செஞ்சேன் சாமின்னு சொன்னேன்….

அதுக்கு அவர் என்ன சொன்னார்….

மறுபடியும்…. ஹா., ஹா…. ஹா ன்னு சிரிக்கிறாருடி….

அப்பறம் என்ன சொன்னாரு…

அதுவா….. அது செஞ்சே சரி….. இப்ப விஜய் டிவி யிலேஒருசீரியல் நாடகம் எட்டு மணிக்கு போடுவாங்க……அந்த நாடகத்தையும் போய் பாரு….. அதுலேயும் பொண்ணுக்கு அம்மா கிட்டே ஒரு பரிகாரம் சொல்லுவேன்….. அதை உஷாரா கேட்டுட்டு….அதை போலஇன்னொரு பரிகாரம் செஞ்சி…அரை கிலோ இருட்டு கடைஅல்வா வாங்கி….பழம்.. பூ….அத்தோடவைச்சி என் கிட்டே வந்து கோடு….. நான் உனக்காக அந்த மகா சக்தியைவேண்டிக்கிறேன்னுசொன்னாரு..,.நானும் அப்படியே செஞ்சேண்டி….,

அப்புறம் என்னாச்சி….

அப்பத்தான் என் சம்மந்தி வந்து இன்னும் அதிகமாசண்டை போட்டாடி….

நீ மறுபடியும்சித்தரை போய் பார்த்தியா….

அவரு அப்பவும்…. ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு,…எல்லா டிவி நாடகசீரியலிலும் என்னைதான் நடிக்க சொல்லி கூப்பிடுவாங்க…. நான் என்ன சொல்றேன்னோஅப்படி தான் நடந்திருக்கு….. உன் பிரச்சனை கண்டிப்பா தீரும்ன்னு சொல்லி…. கொஞ்சூண்டு மீந்த அல்வாவைஎனக்கு கொடுத்து ட்டு….. சொன்னாரு பாரு ஒண்ணு….

என்ன…என்னசொன்னாருடி….

நீங்க எந்த டிவி ப்ரோக்ராம் செய்ய வந்தீங்கண்ணு கேட்டாரு பாரு,ஒரு கேள்வி.., அப்ப கோவிலை விட்டு வெளியே ஓடி வந்தவ தான்.. இன்னும் கோவில் பக்கமே போகலை ஆயிரம் ரூபாய் வேஸ்ட்…. அவர் சித்தர் இல்லடி எல்லா நாடக சீரியலிலும்நடிக்கிற சொத்தர்…

நானும் அப்படி ஏமாந்த ஆளு தான்…ஹா..ஹா…ஹா…

அதுசரிஉன்சம்மந்தி………..உன்பையன் கல்யாணத்துலே மருமகளுக்கு போட்ட பத்து சவரன் நகையை பத்திரமா வைச்சிருக்கியாடி….

ஆ…,. ஆங்……வைச்சிருக்கேனே…..

நல்லா வைச்சிருப்பே……தங்கம் விலை ஏறினப்போஎல்லாத்தையும் தான் வித்து தின்னிட்டு ஏப்பம்விட்டியே…. சரியான நாதாரி…நீ எனக்கு அட்வைஸ் பண்ண வரியா…குண்டச்சி…பொறுக்கி…போடி உள்ளே…

  • 56
  • More
Comments (0)
Login or Join to comment.