·   ·  566 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 26.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மறதியால் செயல்களில் தாமதம் உண்டாகும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

ரிஷபம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மதிப்புகள் உயரும். தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் புரிதல் மேம்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மிதுனம்

சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மறதி பிரச்சனைகள் குறையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

கடகம்

குடும்பத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட கால பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில நெருக்கடியான சூழல்கள் தோன்றி மறையும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தோல்வி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு உண்டான புதிய வேலைகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். பணிகளில் இருந்த பொறுப்புகள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

துலாம்

தன வருவாய்களில் இருந்த இழுபறிகள் மறையும். குறுகிய தூர பயணம் மூலம் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன் பொருள் சேர்க்கைக்கான முயற்சிகள் மேம்படும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான உதவிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கையாள்வதில் கவனம் வேண்டும். கலைத்துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாடங்களில் ஒரு விதமான ஆர்வம் இன்மை ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளின் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

மகரம்

தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நிம்மதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம்

சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். கை தொழிலில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயத்தை அடைவீர்கள். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். வேளாண்மை துறைகளில் இருந்த குழப்பங்கள் மறையும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மீனம்

முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் அதிகரிக்கும். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சிகள் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 580
  • More
Comments (0)
Login or Join to comment.