- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 19.4.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் நட்புகள் உண்டாகும். நிதி மேலாண்மை குறித்த தெளிவுகள் பிறக்கும். உயர்கல்வி ஆலோசனைகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயகரமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
வியாபார பணிகளில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும். வாழ்க்கை துணை வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
விருச்சிகம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
மகரம்
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். அறிமுகம் இல்லாத எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத வகையில் தனவரவுகள் கிடைக்கும். மனை தொடர்பான வில்லங்கம் விலகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அனுபவம் மிக்க வேலை ஆட்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு