எளிமையின் சிகரம்
கர்மவீரர் காமராஜர் எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர். கைக்கடிகாரம்கூட கட்டமாட்டார். பாக்கெட்டில் மணிபர்சோ, பேனாவோகூட இருக்காது. ஒரு சிறு கைக்குட்டை மட்டும் வைத்திருப்பார். அதை எடுத்து முகம்கூட துடைக்கமாட்டார்.
"கடிகாரம்கூட இல்லாமல் இருக்கின்றீர்களே... நேரம் தெரியவேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று எழுத்தாளர் சாவி அவரிடம் கேட்டார்.
அதற்கு காமராஜர் அவருக்கே உரிய பாணியில், "கடிகாரம் எதுக்குன்னேன், யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்கண்ணேன்” என்றார் காமராஜர்.
ஆடம்பரத்தையும், வீண் விளம்பரத்தையும் கட்டிக்கொண்டு பவனிவரும் இன்றைய தலைவர்கள் காமராஜர் போன்ற மாமனிதர்களையும் சற்று நினைத்துப் பார்ப்பது நல்லது!