·   ·  824 posts
  •  ·  0 friends

முப்பெரும் மன்னர்கள் காலத்தில் வழிபட்ட ஜேஷ்டா தேவி

மறக்கப்பட்ட தவ்வை வழிபாட்டின் ரகசியம்

பாற்கடலைக் கடைந்தபோது,

அமிர்தம் கிடைப்பதற்குமுன்

பல அபூர்வங்கள் தோன்றின.

மந்தார மரம்,

பாரிஜாதம்,

கற்பக விருட்சம்,

காமதேனு,

சந்திரன்,

ஐராவதம்,

சங்க நிதி, பத்ம நிதி,

தன்வந்திரி,

மகாலட்சுமி…

இவை அனைத்திற்கும் முன்னரே

பாற்கடலிலிருந்து தோன்றியவள் ஜேஷ்டா தேவி.

மகாலட்சுமிக்கு முன் தோன்றியவள் என்பதால்,

அவள் “மூத்த தேவி”,

“மூத்தாள்” என அழைக்கப்பட்டாள்.

காலப்போக்கில் அந்தப் பெயரே “மூதேவி” என மருவியது.

‘ஜேஷ்டா’ என்பது வடமொழிச் சொல்.

அதன் பொருள் – முதல், மூத்தவள்.

காகத்தைக் கொடியாகவும்,

கழுதையை வாகனமாகவும்,

துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டு

ஜேஷ்டா தேவி காட்சி தருகிறாள்.

செல்வத்தின் அதிபதியான

மகாலட்சுமியின் மூத்த சகோதரி என்பதால்,

இவள் ‘தவ்வை’

(தமக்கை) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.

பெருத்த உடலமைப்புடன்,

மகன் மாந்தன்,

மகள் மாந்தி

இருவருடன் அமர்ந்த கோலமே

ஜேஷ்டா தேவியின் அடையாள வடிவம்.

மாந்தனின் முகம் ரிஷப வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

மன்னர்கள் காலத்து ஜேஷ்டா தேவி வழிபாடு

பல்லவ மன்னர்கள் காலத்தில்

ஜேஷ்டா தேவி வழிபாடு

மிகவும் சிறப்பாக இருந்தது.

செல்வச் செழிப்பு

அரசியல் நிலைத்தன்மை

நாட்டின் வளமை

இவற்றிற்காக

தவ்வையை வணங்கும் வழக்கம்

அரச மரபாகவே இருந்தது.

பிற்கால சோழர்கள் காலத்தில்

இந்த வழிபாடு மெல்ல குறைந்தாலும்,

படையெடுப்பிற்குச் செல்லும் முன்

ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன் வைத்து

வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.

முற்கால பாண்டியர் காலத்திலும்

இந்த வழிபாடு இருந்ததற்கான

சிற்பச் சான்றுகள் காணப்படுகின்றன.

இன்றும் காணப்படும் ஜேஷ்டா தேவி சன்னிதிகள்

அரையப்பாக்கம் – ஸ்ரீ அருணாதீஸ்வரர் கோயில்

(திருக்கழுக்குன்றம் – மதுராந்தகம் இடையே)

வடமேற்கு திசையில்

ஜேஷ்டா தேவிக்கு தனிச் சன்னிதி.

இருபுறமும் சேடிப்பெண்கள்,

ஒருபுறம் ஏர் கலப்பை,

மற்றுபுறம் கழுகுக் கொடி –

புடைப்புச் சிற்ப வடிவில் காட்சி.

ஆனூர் (செங்கற்பட்டு மாவட்டம்)

சிவன் கோயிலில்

ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம்.

ஆத்தூர் – ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயம்

(தர்மசம்வர்தினி அம்பாள் சமேதம்)

இங்கு ஜேஷ்டா தேவி

விவசாயத்தின் காவல் தெய்வமாக

வளமைக்கு அதிபதியாக

வணங்கப்படுகிறாள்.

தன்னை வணங்குவோரை

விபத்திலிருந்து காக்கும் தெய்வம்

என்பது இங்குள்ள ஐதீகம்.

🌾 ஜேஷ்டா தேவி வழிபாட்டின் உண்மை பொருள்

ஜேஷ்டா தேவி

வறுமையின் சின்னம் அல்ல.

வளத்தை பாதுகாப்பவள்

செல்வத்தை நிலைநிறுத்துபவள்

உழைப்பின் பயனை காப்பவள்

என்பதே

பழங்கால மன்னர்களின் நம்பிக்கை.

அதனால்தான்,

முப்பெரும் மன்னர் காலத்தில்

இவள் வழிபாடு

அரசு வழிபாடாகவே இருந்தது.

  • 1116
  • More
Comments (0)
Login or Join to comment.