·   ·  765 posts
  •  ·  0 friends

மூலிகைகளின் சிறப்புப் பண்புகள்

  • துளசி இலைச் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத் தன்மை வெளியேறும்.
  • அருகம்புல் சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாகும்.
  • வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.
  • கொத்துமல்லிச் சாறு பசியைத் தூண்டும்; வாதம், நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.
  • புதினாச் சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக் கோளாறை சரிசெய்யும்.
  • வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகத்திற்கு அருமருந்தாகும்.
  • தூதுவளைச் சாறு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்; சளியை விரட்டும்.
  • மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை தீர்க்கும்.
  • தும்பைச் சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்தாகும்.
  • வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்டக் கொழுப்பைக் குறைக்கும்.
  • காய்கறி சாறு சாப்பிட்ட, 20 நிமிடங்களில் ஜீரணமாகி, சக்தியாக மாறும்.
  • இஞ்சியை அரைத்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்தால், சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும்.இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
  • 121
  • More
Comments (0)
Login or Join to comment.