·   ·  797 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 1.1.2026.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவான பேச்சுகள் நல்ல மதிப்பை உருவாக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் தாமதமாகி முடியும். பேச்சுகளில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் வியாபாரத்தில் நன்மையை தரும். பிற மக்களால் ஆதாயம் அடைவீர்கள். செய் தொழிலில் முயற்சி ஏற்ப லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல்கள் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். சேமிப்புகள் மூலம் ஆதாயமான வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

வியாபார பணிகளில் புதுமை ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் மேம்படும். கற்பித்தலில் சில மாற்றங்களை செய்வீர்கள். மருத்துவத் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

ஆன்மிக காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். மாற்று மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் உயரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயணம் மூலம் புதுமையான சூழல் உண்டாகும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் பலிதமாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான சூழல்கள் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த ஒரு செயலில் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

கால்நடைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

எதிலும் திருதியற்ற சூழல் அமையும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்கிறீர்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். திறமைக்குண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.