- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 7.7.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: மனக் குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் காண்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.
மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனை கள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: கணவன் மனைவி பிரச்சினைக்குள் மூன்றாம் நபரை நுழைய விடாதீர். சேமிப்பு கரையலாம். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கன்னி: தொட்டது துலங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புதுவழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
துலாம்: உறவினர்கள், பழைய நண்பர்கள் வீடு தேடி வந்துப் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பொறுப்புகளை அறிந்து கொள்வர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார போட்டிகள் விலகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
விருச்சிகம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வாகனப் பழுதை சீரமைப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
மகரம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி கள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் லாபம் தரும்.
கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். மேலதிகாரி ஆதரவு தருவார்.
மீனம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.