இன்றைய ராசி பலன்கள் - 72.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாஸ்திரம் சார்ந்த பணிகளில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். அரசு பணியில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். சக ஊழியர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்புகள் மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
நண்பர்களின் ஆதரவால் நன்மைகள் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல்கள் அமையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
இனம் புரியாத சில சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய புரிதல்கள் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தல தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாக பணிகளில் பொறுப்பும் திறமையும் வெளிப்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான அனுபவங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் செயல்பாடுகள் மூலம் ஆதாயம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகரம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். சுபகாரிய எண்ணம் பலிதமாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
மீனம்
விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். குறுகிய பயணத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை