இன்றைய ராசி பலன்கள் -15.11.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படவும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
பணியாட்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். மனை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
நினைத்து சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். உடன் இருப்பவர்களால் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மத்தியமான லாபங்கள் கிடைக்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வீடு மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
கணவன் மனைவிக்கு அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மன திருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
கும்பம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மீனம்
சகோதரர்களின் அரவணைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் கணிசமாக உயரும். அலுவலகத்தில் மேன்மையான சூழல்கள் அமையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கோபம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்