- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 14.3.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் பிறக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்விப் பணிகளில் ஆர்வம் இன்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். உயர் அதிகாரிகளின் தன்மையை அறிந்து செயல்படவும். சவாலான பணிகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
எந்த காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணி ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
புத்திரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமாக இருந்து வந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
துலாம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த இடைவெளிகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பாகப்பிரிவினை விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுமை ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
வாக்கு சாதுர்யம் மூலம் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். ஆதரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மீனம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாய தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புனித யாத்திரை தொடர்பான பயணங்கள் கைகூடும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை