·   ·  804 posts
  •  ·  0 friends

வாழ்க்கை தத்துவங்கள்

பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.

செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.

பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது.

தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண் போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.

விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.

உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.

படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.

சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.

  • 49
  • More
Comments (0)
Login or Join to comment.