·   ·  345 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 27.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். பழைய விஷயங்களால் குழப்பங்கள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் இருப்பது நல்லது. கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

குடும்பத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். பெரியோர் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் விலகும். உத்யோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படும். பணி புரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கடகம்

நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தந்தை இடத்தில் விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபார விஷயங்களில் கனிவுடன் செயல்படவும். மனதளவில் புதிய கனவுகள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். உற்பத்தி துறைகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். பாசம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

துலாம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொழிவுகள் மேம்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

விருச்சிகம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் கோபம் இன்றி செயல்படவும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவது நல்லது. அக்கம் பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

தவறிய சில வாய்ப்புகள் மூலம் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் பேசும் போது பேச்சுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வங்கி துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணம் மேம்படும். உயர்கல்வியில் மேன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செய்யப்படுவார்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

சவாலான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

கற்றலில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசியல் வட்டங்களில் முக்கியத்துவம் உண்டாகும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். மருத்துவ துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். செயல்திறனில் ஒரு விதமான மாற்றங்கள் காணப்படும். மூத்த சகோதரர்களால் சில விரயங்கள் ஏற்படும். சுபச்செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 613
  • More
Comments (0)
Login or Join to comment.