·   ·  525 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 31.10.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்னைகளின் காரணத்தை கண்டறிவீர். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கடகம்

முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

துலாம்

புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்கள் வழியில் கிடைக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவு முயற்சிகளில் பொறுமை வேண்டும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் வகையில் ஆதாயம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கும்பம்

உறவுகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

விடாப்படியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வலியால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 440
  • More
Comments (0)
Login or Join to comment.