·   ·  720 posts
  •  ·  0 friends

திருப்தி

ஒருவன் "என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்" என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர். அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

"என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள்" என்றான். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.

அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது "முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும் ஆயிரமாவதாக­ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும்" என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.

முதலில் நின்றவர் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார். இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக் கொண்டார்கள். இப்படியே யாருமே கடைசி வரையில் பணம் பெற வரவே இல்லை...

மனித மனம் கிடைப்பதில் ஒருபோதும் திருப்திப் படுவதே இல்லை..!!

  • 109
  • More
Comments (0)
Login or Join to comment.