·   ·  1522 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.6.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவுகள் வழியில் அலைச்சல் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். கடன் செயல்களால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வெளியுணவுகளை குறைத்து கொள்ளவும். முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சிம்மம்

இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

கன்னி

மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உறவினரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

துலாம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

விருச்சிகம்

தடைபட்ட பணிகள் முடியும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணங்கள் மூலம் அனுபவம் மேம்படும். பொழுதுபோக்கு செயல்களில் கவனத்துடன் செயல்படவும். கல்வியில் ஆர்வம் இன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

மகரம்

தேவைக்கேற்ப தன வரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பொன் பொருட்கள் சேர்க்கை ஏற்படும். கோப உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். செல்லப்பிராணிகள் மீதான ஆர்வங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிதானமாக முடிவுகளை எடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். நிர்வாக சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 71
  • More
Comments (0)
Login or Join to comment.