இன்றைய ராசி பலன்கள் -14.11.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிற மத மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் மேம்படும். தாய் வழியில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சிறு தூர பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
கடகம்
மனதில் தெளிவுகள் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தந்திரமான சில செயல்களால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
சாலை பயணங்களில் கவனம் வேண்டும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விருச்சிகம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப பிரச்சனைகளை பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
தனுசு
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சில முடிவுகளில் அனுபவம் கைக்கொடுக்கும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
மனதளவில் தெளிவுகள் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை