- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 8.7.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். பேச்சுகளில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மீக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உருவாக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர்கள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
கடகம்
வரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு செயல்பாடுகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
தந்தை வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் காணப்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும் வேகமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும் ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும். வர்த்தக சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்