உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்....
கண் பார்வை குறைபாடு நீங்க :
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் நீங்க:
முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.