- · 0 friends
நாய் வாலை நிமிர்க்க முடியுமா?
ஒருமுறை கிருஷ்ண தேவராயர் சபையில் ஒரு வாதம் மனிதனின் குணம் நாய் குணத்தை போன்றது ஏப்படி நாய் வாலை நிமித்த முடியாதோ அது மாதிரி என்று கூற, மன்னர் இதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய ஒரு போட்டி வைத்தார் அதாவது நான்கு நாய் குட்டிகள் நால்வர் வளர்க்க வேண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் கொண்டு வர வேண்டும் அப்பொழுது யார் நாயின் வாலை நிமிர்த்தி காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம் .
முதல் நாய் குட்டி கொட்டாயா என்பவருக்கும் இரண்டாவது நாய் குட்டி ராஜாவின் புரோகிதருக்கும் மற்றும் மூன்றாவது நாய் குட்டி தெனாலி இராமனிடமும் மூன்றாவது நாய் மன்னரிடம் வளர பணிக்கப்பட்டது.
முதலில் கொட்டாய நாயை தன் வீட்டிற்க்கு எடுத்து சென்று நாயின் வாலில் ஒரு குச்சியை வைத்து வாலை நிமிர்த்தி நூல் கொண்டு கட்டி விட்டார் , ஆறு மாதம் கழித்து கட்டாயம் தனக்கு நிறய பொண்ணும் பொருள் கிடைக்கும் என்று எண்ணினர்.
அடுத்து ராஜாவின் புரோகிதர் நாயின் வாலை ஒரு பெரிய குண்டை கட்டி தொங்க விட்டார் அவருக்கும் அதே எண்ணம் .
அடுத்து மன்னர் அவரும் தான் பங்கிற்கு ஒரு பெரிய உருளைமற்றும் கம்பியை வால் உடன் இணைத்து விட்டார்.
கடைசியாக நம்ம தெனாலி ராமன் நாயை ஒரு தூணில் கட்டி வாலை அந்த தூணில் இழுத்து கட்டி விட்டார்.ஆனால் அதற்கு மிகுந்த குறைவான உணவை மட்டும் வழங்கினார்.
இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டது.
சபையில் சந்திக்க வேண்டிய நாள்.
முதலில் கொட்டயா தான் நாயின் வாலில் இருந்த நூலை அவிழ்த்து அந்த குச்சியை நீக்கினார் , வால் சட்டென்று சுருண்டது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அடுத்து ராஜாவின் பிரோகிதர், நாயின் வாலில் இருந்த குண்டை அகற்றினார் அதுவும் சுருண்டது .
மன்னரும் அது மாதிரி தான் அந்த இரும்பு கம்பியை அகற்றினார் அதுவும் சுருண்டு கொண்டது.
தெனாலி ராமன் நாயோ உணவு சரி வர உண்ணாதலால் மிகவும் சோர்ந்து நிற்க கூட சக்தி இல்லாமல் இருந்தது தெனாலி அதன் வாலை அவிழ்க்க அது தன் வாலை சுருட்ட கூட சக்தி இல்லாமல் அப்படியே நீண்டு இருந்தது.
தெனாலி மன்னனிடம் விளக்கினான் மனிதனும் அப்படித்தான் எல்லாம் தேவைக்கு மேல் இருந்தால் அவனுக்கு ஆணவம் அதிகமாகி விடும் என்று விளக்கம் கொடுத்தான்.