·   ·  425 posts
  •  ·  0 friends

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க - விளக்கம்

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்ற வழக்கில் உள்ள சொல்லுக்கு பகவான் கிருஷ்ணர் கூறும் விளக்கம்....

அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கின்றார்.

கடவுளை வழிபடும் பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம்.

1.ஆர்த்தன், 2.ஜிக்யாசூ, 3.அர்த்தார்த்தி, 4.ஞானி அப்படின்னு இவங்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ கிருஷ்ணர்.

1.ஆர்த்தன்னு சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாதான் கடவுள் ஞாபகம் வரும். இவர்களுக்கு உடல் ஆரோக்கியம், வாழ்க்கையில் பிரச்சனைன்னு வந்தா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்ந்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க

2. ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு,ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை,இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அறிமுகப்படுத்துன்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் இவங்களோடது.

3. அர்த்தார்தின்னு சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் பிரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க வாழ்க்கையின் சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்டா இவங்களுக்கு போதும்.

4.கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு கடவுளுக்கே வரம் கொடுப்பாங்கலாம்.

இப்படி நான்கு நிலைகளில் எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.

அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் சொல்றார்.

இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட,அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம்.

  • 823
  • More
Comments (0)
Login or Join to comment.