·   ·  1945 posts
  •  ·  0 friends

கணக்கு

முப்பது வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம் இது….கருங்குழி கிராமம்…..அங்கு ஒரு அரசு பள்ளி…. அங்கு ஒரு மாணவன்…பெயர் வருண்…நன்றாக படிக்கக்கூடிய கூடிய மாணவன் தான்….. கணித பாடம் என்றால் அவனுக்கு அலர்ஜி வந்து விடும்…. அனைத்து பாடங்களிலும் தொண்ணூறு மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பான்….. கணித பாடத்தில் மட்டும் முப்பது மதிப்பெண்ணுக்கு மேல் தேறாது…. எப்படியோ கஷ்டப்பட்டு பள்ளி இறுதியாண்டு வந்து விட்டான்.,.. அந்த வகுப்பின் கணக்கு வாத்தியார் சபாபதி….. ரொம்ப பொல்லாதவர்……பிரம்பு அவரிடம் சிலம்பம் ஆடும்….. கணிதம் கற்றுகொடுப்பதில் வல்லவர்,….அவரிடம் கணிதம் கற்கும் எந்த மாணவனும் பெயில் ஆக கூடாது…..என்ற நோக்கத்தில் கணித கல்வியை புரியும் படி போதிப்பார்….அதன் வழி முறைகளை எளிதாக கற்று தருவார்…

வருணுக்கு மட்டும் ஒன்றும் புரியாமல் அவரிடம் தினமும் பிரம்படி வாங்கினான்…. சபாபதிஅவனை பற்றி சிந்தித்தார்….. நன்றாக படிக்கும் இவன் கணிதத்தில் மட்டுமே இப்படி வீக்காக இருப்பதில் ஏதோ ஒரு வித பயம்தான் காரணம் என,முடிவுக்கு வந்து…. அவனிடம் கேட்டார்.., கணிதத்தில் எந்த பகுதி உனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என கேட்க, வருண் சொன்னான்….. சார் இந்த அல்ஜீப்ராவை பார்த்தால் பயம்.,. அதனால் கணித பாடமே ஒருவித சாபமாக எனக்குள்படுகிறது என்றான்.,.. உடனே சபாபதி…உன் தந்தையிடம் சொல்லி தினமும் ஒரு மணி நேரம் டியுஷனுக்கு என்னிடம் வா.. என்றார்…. வருணோ….சார் உங்களுக்கு பீஸ் தரகூடியநிலையில் என் தந்தை இல்லை……என்றான்.

சபாபதிஅவனை பார்த்து சிரித்து விட்டு,…..வருண்….. உன்னிடம் யார் பீஸ் கேட்டது……நாளை முதல் என்வீட்டிற்குவா…. கணிதபாடம் கற்று கொள்….. என்றார்….வருணும் அவரிடம் தினமும் ஒரு மணி நேரம் சென்று கணிதம் கற்றான்…அவன் வந்ததும் தன் மகன் முரளியிடம் ஐந்து ரூபாய் கொடுத்து பார்சல் டீ வாங்கிவர சொல்லுவார். அதை மூன்று பேரும் சேர்ந்து குடித்து விட்டு தன் மகனுக்கும்…வருணுக்கும் பாடம் சொல்லி தருவார்

கணித பாடத்தில் உள்ள கடினமான சூத்திரங்களை முதலில் வருணுக்கு கற்றுக்கொடுத்து…. தனக்கு தெரிந்த கணித அறிவினை,ஆறே மாதத்தில்அவனுக்கு எளிய முறையில் கற்று கொடுத்தார்…. நாளடைவில் கணிதத்தில் புலியாக வருண் விளங்கினான்,…சபாபதி மிகவும் மகிழ்ந்துபோனார்…. SSLC தேர்வில் 500க்கு495மதிப்பெண்பெற்று மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பிடித்தான்வருண்…..செங்கல் பட்டு மாவட்டத்தில் முதலிடம்…. அவனுக்கு பாராட்டுகள் குவிந்தன..,.. வேறு ஒரு பள்ளியில் plus 2 படித்து…. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்றான்….,. இது வரைக்கும் தான் கணித வாத்தியாருக்கு தெரியும்….. அதன் பிறகு வேறுமாவட்ட பள்ளிக்கு மாற்றாலாகி சென்று விட்டார்….. **************************{இருபதுஆண்டுகள் கடந்து விட்டன…..}சென்னையில் ஒரு நடுத்தர தனியார் மருத்துவ மனை…. நோயாளிகள் வருவதும் போவதுமாக பரபரப்பாக காணப்பட்டது … ஐந்தாறு டாக்டர்கள் அமர்ந்து இருந்தார்கள்…ஒரு இளைஞன் எழுபது வயதான தன்தகப்பனாரைஅழைத் து கொண்டு வந்து,ஒரு டாக்டர் முன்உட்கார வைத்தான்…. அந்த முதியவரோ முழுக்க செவிடு….. அவரிடம் கத்தி கத்தி உரக்க பேசும் நிலை டாக்டர்களுக்கு ஏற்பட்டது…. அவரை எல்லா டாக்டர்களுமே…. அவரிடம் போ… இவரிடம் போ…என எல்லோருமே தள்ளி விட்டனரே…..தவிர எவரும் அவரை தன் முன் அமர வைத்து அவர் உடல் நிலையை என்னவென்றே கேட்காமல்அலைகழித்தனர்…..காரணம் அவரிடம் கத்தி கத்தி பேசவேண்டும்….சிறிது நேரம் கடந்து விடவே, முதியவர் மயங்கி விட்டார்…

இந்த காட்டு கத்தல் …..உள் அறையில் அமர்ந்து இருந்த டீனுக்கு கேட்டது…. அவருக்கு சொந்தமான மருத்துவ மனை தான் அது……வெளியே வந்து முதியவரை அழைத்து வந்த இளைஞனை பார்த்து….. இவருக்கு என்ன உடம்புக்கு……என விசாரிக்க,அவனும், இவர் என் தந்தை…. அடிக்கடி நெஞ்சு வலி வந்து துவண்டு போய் விடுகிறார்…. அதனால் இங்கு அழைத்து வந்தேன்…இவருக்குநீங்களாவது என்ன வென்று பாருங்கள் டாக்டர்……என்று கெஞ்சினான்அந்தஇளைஞன்…………..உடனேஅந்த டீன் முதலில்இவருக்கு ஒரு செவிட்டு மிஷினை வாங்கி வந்து அவர் காதில் மாட்டுங்கள்…,என கூறி……அவர் பர்சைதிறந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அந்த இளைஞனிடம் நீட்டினார்……அவனுக்கு ஒன்றும் புரியவில்லை…. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்……நீங்கள் எதுவும் பேசவேண்டாம் …, சொன்னதை செய்யுங்கள்… என்று கூறி விட்டு ஒரு சக்கர நாற்காலியை அவரே கொண்டு வந்து,அதில் அந்த முதியவரை உட்கார வைத்து அவரே அதனைதள்ளி கொண்டுபோய் ….வார்டுக்கு சென்றுஅவரை இரு கைகளிலும் ஏந்திபடுக்கையில்தூக்கிகிடத்தினார்,

அனைத்து டாக்டர்களும் மிரண்டு போய் அவரிடம் குவிந்து விட்டார்கள்…..அவர்களை பார்த்து அந்த டீன் சொன்னார்……உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….. நானே இவரை பார்த்து கொள்கிறேன் என கூறி அவர்களை கடுப்புடன் போக சொல்லிவிட்டார்……அங்கிருந்த நர்ஸ்களைபார்த்து ஏதேதோ கூற அந்த படுக்கையருகேஅனைத்து உபகரணங்களும்வந்து விட்டன…. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு மணி நேரம் செக்கப் நடந்தது….. ஒரு VIP போல் அந்த முதியவர் கவனிக்க பட்டார்…. ஒரு ஊசிமருந்தை மட்டும் போட்டு விட்டு அரை மயக்கத்திலிருத்த அந்த முதியவருக்கு குளுக்கோஸ் ஏற்ற பட்டது…. அதற்குள் அங்கு வந்த அவர் மகன் ஏதும் புரியாமல் அவர் காதில்மிக நுண்ணிய மிஷின் ஒன்றை பொறுத்தினான்…..

ஒரு மணி நேரம் சென்றது…,. முதியவர் கண் விழித்தார்..,. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை…. டீன் அவர் மகனை பார்த்து உன் தந்தைக்குஒன்றுமில்லை….பலஹீனம் தான்…. எல்லா செக்கப் ரிசல்ட்டையும்பார்த்து விட்டேன்…, ஒரு வைட்டமின் மாத்திரையை தினந்தோறும் போட வேண்டும்…..எழுதி கொடுக்கிறேன் இங்கேயே வந்து பார்மசியில் காசு ஏதும் கொடுக்காமல்வாங்கி செல்…இங்கும் பணம் ஏதும் கட்ட வேண்டாம்…. இது என் கடமை.. என்று கூறி கொண்டே சென்றார்…

அவர் மகனோ….. டாக்டர் நீங்கள் யார் தெரியவில்லையே…..இவ்வளவு உதவி செய்கிறீர்களே……என கூறஅந்த டீன் சிரித்து கொண்டே ஒரு பெரிய….சில்வர் கிளாசைஎடுத்து அவனிடம்கொடுத்து கூடவே இருபதுரூபாயை எடுத்து கொடுத்து…. முரளி…. இந்த இருபது ரூபாய்க்குபார்சல் டீ வாங்கிவா….. நாம மூணு பேரும் சேர்ந்து குடிக்கலாம் என கொடுத்தார்….. சபாபதிக்கு புரிந்து விட்டது……வருண் முதுகை அன்பாக வருடினார்….. முரளியும் கண்ணீர் வடித்தவாறே….அவரை ஓடி வந்து அணைத்து கொண்டான்…வருண் பேச ஆரம்பித்தான்….. சார் நான் plus2விலும்மாநிலத்தில் மூன்றாவதாக வந்தேன்….. எனக்கு டாக்டர் சீட் எளிதாக கிடைத்தது…. மருத்துவம்படித்து விட்டு.,பிறகு M. D படித்தேன்….. பட்டம் வாங்கிய கையோடு கருங்குழி வந்தேன்…. உங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க.

ஆனால் நீங்கள் மாற்றலாகி சென்று விட்டீர்கள்……பூஜ்ஜியத்தில்இருந்த என்னை இந்த ராஜ்ஜியத்தை ஆளும் வல்லமையை கொடுத்தீர்கள்…கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்த குரு நீங்கள்….. நீங்கள் மட்டும் அன்று சொல்லித்தரவில்லை என்றால் நான் நாற்பது மதிப்பெண் ணிற்குமேல் எடுத்திருக்க மாட்டேன்…. டாக்டர் சீட்டும் கிடைத்திருக்காது…ஒரு கிளார்க்காக போயிருப்பேன்…..இந்த புகழ் எல்லாம்உங்களுக்கு தான்….அதனால் தான் இந்த மருத்துவ மனையின் பெயர் கூட "வருண்சபா"எனவைத்தேன்…. என கூறி அவர் காலை தொட்டு வணங்கினார் டீன் வருண்…. சபாபதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது….. அது ஆனந்த கண்ணீர்…. மற்ற டாக்டர்கள் முதற்கொண்டு நர்ஸ்கள்வரை விக்கித்து நின்றார்கள்…..

  • 38
  • More
Comments (0)
Login or Join to comment.