
மனித வடிவில் வந்த கடவுள்
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது ஏழைச்சிறுமி. அப்பா இல்லாமல் தாயால் வளர்க்கப்படுகிறாள்.. ஒருநாள் அம்மா அந்தக் குழந்தையை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள்.
அவள் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில், ஒரு மனிதன் அவளைப் புகைப்படம் எடுத்தான். அந்தப்படம் சமூக வலைதள ஊடகங்களில் வைரலாகப் பரவி விட்டது. ரொட்டி நிறுவனம் குழந்தையை விளம்பரத் தூதராக மாற்றியது.
குழந்தையின் கள்ளங்கபடமில்லாத சிரிக்கும் முகம் தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அம்மா குழந்தை இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டை ரொட்டி நிறுவனம் வழங்கியதோடு, பட்டப்படிப்பு வரை பெண் மகளின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
புகைப்படம் எடுத்த மனிதன் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்த கடவுளாகக் கருதப்படுகிறார். எதிர்பாராத எளிமையானதொரு நல்ல செயலின் விளைவு சிலரின் வாழ்க்கையை இதுபோல சிறப்பாக மாற்றுகிறது என்பதை அவ்வப்போது நாம் காண்கிறோம்.