·   ·  285 posts
  •  ·  0 friends

நீங்கள் தினமும் இரவு நன்கு தூங்குகிறீர்களா ?

சரியாக தூங்காவிட்டால் சோர்வாக இருக்கும் என்பதை தவிர மோசமான தூக்க பழக்கம் என்பது நம் உடல்நலம், மனநிலை மற்றும் உற்பத்தித்திறனை நாம் நினைத்து பார்க்காத வகையில் மறைமுகமாக கடுமையாக பாதிக்கும்.

பலருக்கும் தற்போது படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவது என்பது கனவாகி விட்டது. சிலர் தூங்குவதே நள்ளிரவுக்கு மேல் தான் தூங்குகிறர்கள். நன்கு தூக்கம் வரும் வரை மொபைல் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன்களை தொடர்ந்து பயன்படுத்தி நேரத்தை கடத்துகிறார்கள்.

இது போன்ற காரணங்களால் நம்மில் பலருக்கும் தரமான தூக்கம் கிடைப்பது என்பது அரிதாக மாறி வருகிறது. சரியாக தூங்காவிட்டால் சோர்வாக இருக்கும் என்பதை தவிர மோசமான தூக்க பழக்கம் என்பது நம் உடல்நலம், மனநிலை மற்றும் உற்பத்தித்திறனை நாம் நினைத்து பார்க்காத வகையில் மறைமுகமாக கடுமையாக பாதிக்கும். நன்கு தூங்குவது ஏன் முக்கியம், உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதற்கான அறிகுறிகள் மற்றும் சிறந்த தூக்கத்தை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி புரிந்து கொள்வோம்.

தூக்கத்தின் போது தான் நம் உடல் அத்தியாவசிய பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பை பணிகளை மேற்கொள்ளும். இது தெரிந்து கூட நம்மில் பலர் மோசமான தூக்க பழக்கத்தை நீண்ட வேலை நேரம், மன அழுத்தம் அல்லது இரவு நேர சமூகமயமாக்கல் என ஏதாவதொரு காரணத்தை கூறி சமாதானப்படுத்தி கொள்கிறோம். ஆனால் இது மெதுமெதுவாக நம் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை பலரும் உணர்வதில்லை. பகல்நேரத்தில் தூக்கம் வருவது மற்றும் அடிக்கடி கொட்டாவி விடுவது போன்ற வெளிப்படையாக தெரியும் அறிகுறிகளை தவிர்த்து உங்கள் உடலுக்கு தேவையான நல்ல தூக்கம் உங்களுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் சில ஆச்சரிய அறிகுறிகள்....

அடிக்கடி ஏற்படும் காலை நேர தலைவலி:

உங்களின் இரவு தூக்கம் மோசமானதாக இருந்தால் மூளையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ரத்த ஓட்டம் சீர்குலைந்து, பெரும்பாலும் காலை நேரத்தில் தலைவலி ஏற்பட வழிவகுக்கும். நீங்கள் பல நாட்கள் தொடர்ந்து லேசான அல்லது வீரியமிக்க தலைவலியுடன் எழுந்தால், அது உங்கள் தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பதை குறிக்க கூடும்.

நினைவாற்றல் குறைபாடுகள்:

நம்முடைய நினைவாற்றலை ஒருங்கிணைக்க சிறந்த தூக்கம் மிக முக்கியமானது. உங்களால் திடீரென்று எளிய விஷயங்களை கூட மீண்டும் நினைவுப்படுத்தி கொள்ளவோ அல்லது வேலையில் கவனம் செலுத்தவோ இயலாமல் சிரமம் ஏற்பட்டால், நீங்கள் தூக்கம் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஜங்க் ஃபுட்ஸ்க்ளுக்கான ஏக்கம் அதிகரித்தல்:

NIH வெளியிட்ட ஆய்வின்படி தொடர்ந்து மோசமான தூக்கம் இருப்பது பசி ஹார்மோனான ghrelin-ன் அளவை அதிகரிப்பதாகவும், வயிறு நிரம்பிய திருப்தி உணர்வை ஏற்படுத்தும் leptin ஹார்மோன் அளவை குறைப்பதாகவும் தெரிகிறது. மோசமான தூக்கத்தால் ஏற்படும் இந்த விளைவு அதிக கலோரி, சர்க்கரை உணவுகளுக்கான தீவிர ஏக்கத்தை தூண்டுகிறது.

மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் உணர்வு:

போதுமான தூக்கம் இல்லாம் பல நாட்களுக்கு இருப்பது நம் மூளையின் உணர்ச்சி செயலாக்கப் பகுதிகளை பாதிக்கலாம், இது எதற்கெடுத்தாலும் எரிச்சல் உணர்வை வெளிப்படுத்துவது, பதற்ற உணர்வு மற்றும் மூட் ஸ்விங்ஸ் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.

  • 158
  • More
Comments (0)
Login or Join to comment.