·   ·  140 posts
  •  ·  0 friends

திண்டுக்கல் பிரியாணி

செயற்கையான நிறமிகள் பயன்படுத்தாமல் செயப்படும் இந்த திண்டுக்கல் பிரியாணியின் ருசியும் மனமும் தனி ரகம்.

  • தலப்பாக்கட்டு பிரியாணி,வேணு பிரியாணி, பொன்ராம் பிரியாணி, சிவா பிரியாணி என் திண்டுக்கல்லில் பிரியாணி ஹோட்டல்களில் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
  • திண்டுக்கல் என்றாலே சட்டுனு நினைவுக்கு வருவது திண்டுக்கல் பூட்டுதான்.. பூட்டுத் தொழிலுக்கு பெயர் போன திண்டுக்கல், இப்ப பிரியாணிக்கும் பிரபலமா இருக்கு..
  • தமிழகத்துலயே பிரியாணிக்கு பெயர் போன ஆம்பூருக்கு சற்றும் சளைத்தது அல்ல திண்டுக்கல் பிரியாணி.
  • முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் பிரியாணி மணம் வீசத்தொடங்கியது.
  • முதலில் வட இந்தியாவிலும் பின்னர் முகலாயர்களின் ஆளுகைக்கு உட்பட்ட தென்னிந்திய பகுதிகளிலும் பிரியாணி பிரபலமடைந்தது.
  • அந்த வகையில் தான் ஹைதர் அலியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திண்டுக்கல்லுக்கும் பிரியாணி வந்தடைந்தது.
  • திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மேச்சேரி ஆட்டுக் குட்டிகள் தான் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • ஏரிகளைச் சுற்றி மேய்வதால் மேச்சேரி குட்டிகள் என அழைக்கப்படும் இந்த ஆடுகளில் கொழுப்புத் தன்மையும், பசப்பு தன்மையும் அதிகமாகக் காணப்படும் அதனால் தான் திண்டுக்கல் பிரியாணி மிகச் சுவையாகக் காணப்படுகின்றன.
  • இரண்டாவதாகச் சீராகச் சம்பா அரிசி, சீரகச் சம்பா அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் அந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் வகை காலாபாத் என்ற சீராகச் சம்பா அரிசி ஆகும். திண்டுக்கல் பிரியாணி இந்த ரக சீரகச் சம்பாவில் தயாராவதால் தான் மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது
  • மூன்றாவதாகப் பட்டை கிராம்பு, ஏலக்காய் பொடி. பொதுவாகப் பிரியாணியில் பட்டை கிராம்பு ஏலக்காய் அனைத்தும் தாளிப்புக்கே பயன்படும். ஆனால் இங்குச் செய்யப்படும் பிரியாணியில் இவை அனைத்தும் அரைத்துப் பொடியாகவே பயன்படுத்தப்படுகிறது.
  • நான்காவது ரகசியம் வெங்காயம் தான். பிரியாணி என்றால் பொதுவாக அனைவரும் பெரிய வெங்காயமே பயன்படுத்துவர்.
  • ஆனால் இங்கு திண்டுக்கல்லில் சின்ன வெங்காயமே பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயத்தை உரித்து, அரைத்து அதை பிரியாணிக்குப் பயன்படுத்துகின்றனர்.
  • இந்த நான்கு முக்கியமான விஷயங்கள் தான் திண்டுக்கல் பிரியாணியில் அலாதியான சுவைக்குக் காரணமாக உள்ளன.
  • 1224
  • More
Comments (0)
Login or Join to comment.