·   ·  1053 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 17.2.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

ரிஷபம்

குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அமைதியான செயல்கள் உங்கள் மதிப்பை மேம்படுத்தும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் ஏற்படும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கடகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

சிம்மம்

குழந்தைகள் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

துலாம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

தனுசு

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தி அற்ற சூழ்நிலைகள் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துயரம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகரம்

உடன் இருப்பவர்களினால் எதிர்பாராத செலவுகளும் நெருக்கடிகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மீனம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாகன பயணத்தால் அனுகூலம் ஏற்படும். செய்தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடை மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 39
  • More
Comments (0)
Login or Join to comment.