·   ·  384 posts
  •  ·  0 friends

எது அன்பு?

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியையை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்துவதும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார்.

திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் மலர் இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு பூச்சி இருந்தது. நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியையிடம் "நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை" என்று கேட்டார.

அதற்கு அந்த மாணவி, "நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குள்ளப்பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்" என்று பதில் கூறினாள்.

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியையும் அந்த மாணவியை அணைத்துக் கொண்டார்.

"அன்பு என்றால் இது தான். ஒன்றும் கொடுக்க வேண்டாம். எதையும் பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்" என்றார்.

  • 285
  • More
Comments (0)
Login or Join to comment.