·   ·  141 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 24.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். துரிதம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்பு குறித்த சில நுட்பங்கள் அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவு பெறும். சுபகாரிய பணிகள் சாதகமாகும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்த தன்மை நீங்கும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பிறமொழி மக்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நண்பர்களின் எண்ணிங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வியாபார இடமாற்றங்கள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்கள் பெறுவீர்கள். சில அனுபவங்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணி நிமித்தமான ஒத்துழைப்புகள் மேம்படும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பிரயாணம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

சமூக வட்டார அமைப்புகள் மூலம் மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். நிர்வாகத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மீனம்

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவுகள் அதிகரிக்கும். சில புதிய வாய்ப்புகளால் மாற்றங்கள் உருவாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 147
  • More
Comments (0)
Login or Join to comment.