
தாய்ப்பால் அதிகரிக்க....
புதிதாகப் பிறந்த ஒரு பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பாலைப் போன்ற சிறந்த உணவு இருக்க முடியாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் புதிதாக குழந்தையைப் பிரசவித்த தாய்மார்கள் சிலர் தங்களுடைய குழந்தைக்குக் கொடுப்பதற்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் வருத்தம் அடைகின்றனர். எனினும் இதற்கு வருத்தப்படுவதற்குப் பதிலாக தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். அந்த வகையில் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில இயற்கையான மற்றும் எளிமையான வழிகள் உள்ளன.
நீங்கள் எவ்வளவு அடிக்கடி உங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அந்த அளவு தாய்ப்பால் விநியோகம் அதிகரிக்கும். தாய்ப்பால் என்பது சப்ளை மற்றும் டிமாண்ட் அடிப்படையில் உற்பத்தியாகக் கூடிய ஒன்று. எனவே உங்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி போதுமான அளவு இல்லை என்பதை நீங்கள் கவனித்தால் உங்களுடைய குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள்.
தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கு லாக்டேஷன் குக்கீஸ் போன்ற சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்வதற்கும், உணவில் வெந்தயம், சோம்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்வதற்கும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.