
புத்தர் சொன்ன பதில்
ஒரு முறை புத்தரிடம் கேட்டார்கள் தியானம் செய்து நீங்கள் என்ன பெற்றீர்கள் ?
அதற்கு புத்தர் தியானம் செய்வதால் எதையும் பெறவில்லை!.
ஆனால் இழந்து இருக்கிறேன் என்று பதில் அளித்தார்கள்.
அதை கேட்ட சீடர்கள் அப்படி என்ன இழந்தீர்கள் என்று கேட்டனர்.
கோபம், பதட்டம், மரண பயம், பொறாமை இப்படி நிறைய கூறலாம் என்று பொறுமையாக பதில் அளித்தார்.