·   ·  2146 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 13.11.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய பிரச்​சினைகளைத் தீர்க்க புது வழி யோசிப்​பீர்​கள். புது வேலை கிடைக்​கும். தந்​தையின் உடல்​நலம் சீராகும். பழைய நண்​பர்​கள் தேடி வரு​வர். தொழி​லில் பங்​குதா​ரர்​கள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

ரிஷபம்: மக​னின் படிப்​புக்​காக அலைய வேண்டி வரும். மகளின் திரு​மணம் தொடர்​பான பேச்சு​வார்த்​தையில் முன்​னேற்​றம் இருக்​கும். குடும்​பத்​தா​ரிடம் விட்​டுக் கொடுத்து போகவும். வியாபாரத்​தில் அவசரப்​பட வேண்​டாம். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை அதி​கரிக்​கும்.

மிதுனம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். தாயாரின் உடல்​நிலை சீராக அமையும். உறவினர் வருகை​யால் வீடு களைகட்​டும். வியாபாரத்​தில் வீண் விவாதங்​கள் நீங்​கும். லாபம் கூடும். பயணம் திருப்தி தரும். அலு​வல​கரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிட்​டும்.

கடகம்: குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் சந்​தோஷம் நிலைக்​கும். பிள்​ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்​தில் வேற்​றுமொழி, மதத்​தின​ரால் ஆதாயம் உண்டு. அலு​வல​கத்​தில் பணிகளை விரைந்து முடிப்​பீர். மேலதி​காரி​களின் பாராட்​டைப் பெறு​வீர்.

சிம்​மம்: பிரிய​மானவர்​களின் சந்​திப்​பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்​பத்​தினரிடம் மனம் விட்​டுப் பேசுவீர். தலை​வலி, தூக்​கமின்மை நீங்​கும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

கன்னி: பிரபலங்​கள் சிலரை சந்​திப்​ப​தால் உங்​கள் வாழ்​வில் சில மாற்​றங்​கள் வரக்​கூடும். ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு அதி​கரிக்​கும். வியாபாரத்​தில் பணி​யாட்​கள் உதவி​கர​மாக இருப்​பர். புதிய பங்​குதாரர்​களின் ஆலோ​சனைகளை ஏற்​கவும். உத்​தி​யோகம் சிறக்​கும்.

துலாம்: குடும்​பத்​தா​ரின் எண்​ணங்​களை கேட்​டறிந்து பூர்த்தி செய்​வீர். புது வேலை கிடைக்​கும். பிள்​ளைகளின் பாச மழையில் நனைவீர்​கள். அலு​வல​கத்​தில் பணிகளை முடிப்​பீர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

விருச்​சிகம்: பழைய பிரச்​சினைகளுக்கு மாறு​பட்ட அணுகுமுறை​யால் தீர்வு காண்​பீர்​கள். எலக்ட்​ரானிக்ஸ் பொருட்​கள் வீடு வந்து சேரும். வியாபாரத்​தில் முக்​கிய பிர​முகர்​களின் அறி​முகம் கிட்​டும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​களை பகைத்​துக் கொள்ள வேண்​டாம்.

தனுசு: முக்​கிய முடிவு​களை கவனமாக எடுக்​கவும். மூத்​தோரின் சொல்​பேச்சை கேட்டு செயல்​படுங்​கள். வாக​னம் செலவு வைக்​கும். வியாபாரத்​தில் போராடி பாக்​கி​கள் வசூலிப்​பீர். புதிய யுக்​தி​களைக்கையாண்டு வெற்றி பெறு​வீர். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும்.

மகரம்: திடீரென்று அறி​முக​மாகும் சிலரால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்​பர்​கள் தேடி வரு​வார்​கள். குடும்​பத்​தில் நிம்​மதி தங்​கும். இழுபறி​யாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்​றுக் கொள்​வீர். அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம்.

கும்பம்: சாதிக்க வேண்டு​மென்ற எண்ணம் அதி​கரிக்​கும். சமூகத்​தில் பெரிய அந்​தஸ்​தில் இருப்​பவர்​களின் நட்பு கிட்​டும். மூத்த சகோ​தரர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். வியாபாரத்​தில் பங்​குதா​ரரின் கருத்​துக்கு மதிப்பளிக்​கவும். அலு​வல​கத்​தில் பொறுப்​பு​கள் அதி​கரிக்​கும்.

மீனம்: குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். கணவன் - மனைவிக்​குள் இருந்த பனிப்​போர் மாறும். பணவரவு உண்டு. வாக​னச் செலவு குறையும். அலு​வலக ரீதி​யாக சிலரை சந்​திப்​பீர். மேலதி​காரி​யின் ஆதரவு கிட்​டும். வியாபாரத்​தில் சரக்​குகள் விற்றுத் தீரும்.

  • 207
  • More
Comments (0)
Login or Join to comment.