- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 28.5.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் ஏற்று முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
மிதுனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும்.
கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனக் குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் காண்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். உங்கள் மதிப்புயரும்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக வீட்டை விற்பீர். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெற்றவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்
தனுசு: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மகரம்: பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம்: எதிர்பார்த்து கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
மீனம்: குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் இருக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.