·   ·  608 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 20.11.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

ரிஷபம்

குழந்தைகளின் எண்ணங்களைப் பிரிந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பன சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகள் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட கருத்துகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிக்கல்கள் குறையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

கன்னி

இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.கணவன் - மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மகரம்

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அரசு துறையில் சாதகமான சூழல் அமையும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செல்வ சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கும்பம்

பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். அரசு சார்ந்த உதவிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதயகரமான சூழல் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நன்மை

  • 81
  • More
Comments (0)
Login or Join to comment.