·   ·  1314 posts
  •  ·  0 friends

காசும் சோறும்

என்னா ஈசு, சோர்வா இருக்கே!! என்னா ஆச்சு?

"என்னா ஆவும்? நேத்து தண்ணிய போட்டு ஏதோ வண்டியில கால விட்டு இப்போ போய் பெரியாஸ்பத்திரில கிடக்கு இதுங்க அப்பென். நான் ஆசுபத்திரிக்கும் வூட்டுக்கும் லோல் பட்டுனுகுறேன். என்ன பொறப்போ போ!" என்றபடி வந்த அழுகையை குழந்தைகள் முகத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டே சொன்னாள் ஈஸ்வரி, கற்பகத்திடம்.

"நான் வேணா புள்ளைங்கள பார்த்துக்கறேன். வேலைக்கு போய் வா. வேலைக்கு போனியா இல்லையா?"

"எங்க போனேன்? மூணு நாளா அலையுறேன். அவங்க இப்டிலாம் லீவு போட்டா நீ வர வாணாம்னுட்டாங்க. வேற இடம்தான் பார்க்கணும். அதுவரைக்கும் சோத்துக்கு இன்னா செய்யுறதுன்னுதான் ரோசனை. உக்காந்தேன். ஏதோ வாசபக்கம் வந்து ஜனங்க போக வர பார்த்தா எதுனா மனசு சுளுவா ஆவுமேன்னு." என்று பெருமூச்சு விட்டாள் ஈஸ்வரி.

கற்பகம், "இதோ இரு வாரேன்." என்றபடி சட்டென்று நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் தன் குடிசைக்கு ஓடினாள். தன் சின்ன ட்ரங்க் பெட்டியைக் குடைந்து இரண்டு சேலைகளை எடுத்துக்கொண்டு ஈஸ்வரியிடம் ஓடிவந்தாள்.

"இந்தா புள்ள. இதப் புடி. நாகராஜ் அண்ணனாண்ட சொல்றேன். அது வந்து இடம், நேரம், கட்சி மூணும் சொல்லும். நீ ஒண்ணும் சொல்லாம சரின்னு சொல்லிடு. எந்தக் கட்சி சொல்லுதோ அந்த சேலைய கட்டு. அது குடுக்கற சீட்டை மறக்காம கைல கொண்டுபோ. அங்க போனதும் சீட்ட வாக்கிக்குனு காசும் சோறும் குடுப்பாங்க. வாங்கிட்டு கூட்டம் முடியுற வரைக்கும் உட்கார்ந்துட்டு ஒழுங்கா வூடு வந்து புள்ளைங்களுக்கு சோத்தப் போடு. இன்னும் மூணு மாசம் கழிச்சு வேலைக்கு பார்த்துக்கலாம். இது இப்பதைக்கு உனக்கு தோதா இருக்கும்" என்று சொல்லிவிட்டு விறு விறுவென்று நடந்தாள்.

- முகநூல் பகிர்வு

  • 17
  • More
Comments (0)
Login or Join to comment.