
குழந்தையின் மூக்கில் ரத்தம் வடிகிறதா?
குழந்தைகளின் மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டால் பெற்றோர்கள் எவ்வாறு கையாள்வது?: பொதுவாக, மூக்கில் ஏற்படும் ரத்தப்போக்கு, எபிஸ்டாக்ஸிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது முதன்மை பராமரிப்பு மற்றும் அவசரகால அமைப்புகளில் காணப்படும் மிகவும் அடிக்கடி ஏற்படும் காது, மூக்கு மற்றும் தொண்டை அவசரநிலைகளில் ஒன்றாகும்.
இந்த நிலை பொதுவாக 2-10 வயதுடைய குழந்தைகள் மத்தியிலும், 50 - 80 வயதுக்குட்பட்ட முதியவர்களிடமும் ஏற்படுகிறது. அடிக்கடி குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வந்தால் அந்த குழந்தைகளின் மூக்கின் உட்புறத்தை ஈரமாக வைத்திருப்பது அவசியம் - பெட்ரோலியம் ஜெல்லி அல்லது saline ஸ்பிரே சிறப்பாக வேலை செய்யும். வறண்ட காலநிலை இருக்கும் நாட்களில் குழந்தை இருக்கும் அறையில் humidifier-ஐ இயக்குவது மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்கலாம். மேலும் அலர்ஜிகளுக்கு துவக்கத்திலேயே சிகிச்சை அளித்தல், மூக்கு நோண்டும் பழக்கத்தை நிறுத்துதல் போன்றவை மூக்கில் ரத்தம் வருவதைத் தடுக்க கணிசமாக உதவும் என கூறுகிறார்.
குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வடிவது பொதுவாக பாதிப்பில்லாதது மற்றும் பெரும்பாலும் வறட்சி, ஒவ்வாமை அல்லது மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற சிறிய பிரச்சினைகளுடன் தொடர்புடையது. ஆனால் அடிக்கடி மூக்கில் ரத்தம் வந்தால் அதை புறக்கணிக்கக்கூடாது. எனவே மூக்கில் ரத்த கசிவு அடிக்கடி ஏற்பட்டால், அதிகமாக அல்லது பிற அறிகுறிகளுடன் இருந்தால், எந்தவொரு தீவிரமான பாதிப்பும் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.