இன்றைய ராசி பலன்கள் -13.11.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகைகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். வாகன மாற்ற முயற்சிகள் ஈடேறும். சொத்து வழக்கில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
தாய் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரித்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்களில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
துலாம்
பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விருச்சிகம்
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்களை தோன்றி மறையும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். பழைய பிரச்சனைகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு