·   ·  913 posts
  •  ·  0 friends

சில சித்த மருத்துவ குறிப்புகள்

முந்தைய காலத்தில் உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு கூட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் சரி செய்தனர்.

ஆனால் இன்றைய காலத்தில் பலர் சிறு வியாதி என்றால் கூட உடனடியாக மருத்துவநிலையங்களுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனை கூட இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இது உண்மையில் சில சமயங்களில் ஆபத்தையே விளைவிக்கும்.

இதனை தவிர்த்து சில எளிய முறையில் வைத்தியங்களை மேற்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும்.

அந்தவகையில் சிறு சிறு நோய்களுக்கு தீர்வு அளிக்கும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

• குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

• தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

• தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

• ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

• இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

• பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

• அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

• உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

• கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

• வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

  • 164
  • More
Comments (0)
Login or Join to comment.