- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 30.6.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் டென்ஷன் குறையும்.
மிதுனம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். எதிலும் அவசரம் வேண்டாம். யாரையும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவால் கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
சிம்மம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்.
துலாம்: ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள்.
விருச்சிகம்: நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
தனுசு: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அதிக லாபம் அடைய உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர். உடன்பிறந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
கும்பம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளை மேற்கொள்வீர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மீனம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.