·   ·  1268 posts
  •  ·  0 friends

படிப்பு மட்டுமே ஒரு மனிதனை உயர்ந்தும்

தர்மலிங்கம் அந்த ஊரிலே பெரிய பணக்காரர் அவர்தான். அவருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உண்டு.

விவசாயம் வட்டி கொடவாங்கல், கமிஷன் கடை, பழ மண்டி, இப்படி பல தொழில் செய்து சம்பாதித்து வந்தார். ஏறக்குறைய ஒரு ீன்தார் போல் வாழ்ந்து வந்தார்.

சாரட்டு குதிரை வண்டி , அந்த சாரட்டு குதிரை வண்டியில் வரும்போது எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் அவருக்கு. முதன் முதலில் ஜீப் வாங்கியது அவர்தான்.

மூத்த பையனுக்கு திருமணம் வயது வந்து விட்டது பக்கத்தூரில் அவருக்கு சமமான வசதி படைத்த ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றார்கள் அவர்களும் இவருடைய அந்தஸ்து வசதி எல்லாம் பார்த்து பொண்ணு கொடுக்க தயாரானார்கள்.

திருமணத்திற்கு இரண்டு விட்டார்களும் தயாரானார்கள் பட்டுச்ரிகையில் பளபளக்க சாரட்டு வண்டியில் வலம் வந்தார் மாப்பிள்ளை. பணக்காரர் வீட்டு திருமணம் சொல்லவா வேண்டும்..

காலை முர்த்தம் ஏழு மணிக்கெல்லாம் தாலி கட்டியாச்சு.

தாலி கட்டி முடிந்ததும் சாப்பாட்டுக்கு தயாரானார்கள்.. எல்லோருக்கும் வயிறார பந்தி பரிமாறி கொண்டிருந்தார்கள் சாப்பிட்ட எச்சிலை எடுப்பதற்கு ஆட்கள் இருப்பார்கள் கிராமத்தில்..

இலை எடுக்கும் முனியம்மா மகன் பள்ளிக்கூடம் போகும்போது .... அம்மா இன்னைக்கு இலை எடுக்க போயிருக்காங்க சாப்பாடு வாங்கிட்டு போய் பள்ளிக்கூடத்துல போய் சாப்பிடலாம் என்று ஒரு தூக்குவாளி கையில் கொண்டு வந்தான்.

அம்மா இந்த தூக்கு வாளியில் சோறு வைத்து கொடு நான் பள்ளிக்கூடத்தில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொன்னான்.. அங்கே இருக்கும் ஒரு அம்மாவிடம் தூக்கம் வாளியை கொடுத்து ... என் மகனுக்கு கொஞ்சம் சோறு வைத்துக் கொடுங்கள் என்று முனியம்மாள் சொன்னாள்.

அந்த அம்மாவும் சோறு சாம்பார் கொஞ்சம் பொரியலும் வைத்து கையில் கொடுக்கும் போது தர்மலிங்கம் பார்த்து விட்டார்.. என்னமா நடக்குது?? இங்கே இலைஎடுக்க வந்த இலை மட்டும் தான் எடுக்கணும் இப்படி சோறு எல்லாம் கொண்டு போக கூடாது. நாங்க மிச்ச மீதி இருந்தா தான் கொடுப்போம் என்று கரராகச் சொன்னார். இல்லையா அய்யா என் மகன் பள்ளிக்கூடத்துக்கு போறான்

அம்மா வேலைக்கு போன இடத்துல சோறு வாங்கிட்டு போயிடலாம்னு வந்திருக்கிறான் என்று சொன்னாள்

அதெல்லாம் முடியாது போய் வேலையை பாரு என்று சொல்லி தூக்குவாளி பிடுங்கி தூக்கு வாளியில் இருக்கும் சோறை ஒரு பாத்திரத்தில் தட்டி விட்டார் தர்மலிங்கம்.. முனியம்மா கண்ணீருடன் இரு மகனே கொஞ்ச நேரம் இரு என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்..

அங்கே ஒரு பந்திய முடிந்து விட்டது எச்சிலையை எடுத்துக் கொண்டு வந்தாள்

எச்சிலையில் மிச்சம் இருக்கும் சோறை எடுத்து தூக்குவாளியில் வைத்துக் கொடுக்க மகனும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்....

தன் மகனை நல்லா படிக்க வேண்டும் என்று எண்ணினாள் முனியம்மா.

முனியம்மா நினைத்தது போலவே அந்த பையனும் நல்லபடியாக படித்தான்.

பெயர் தான் தர்மலிங்கம் ஆனால் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்ப்பதற்கு சொத்தை எல்லாம் இழந்து விட்டார். ஒருவருக்கு சொத்து இருக்கும் வரை தான் மதிப்பு சொத்து இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் தன் பிள்ளைகளும் மதிக்கவில்லை.

சாப்பாட்டுக்கு கூட ரேஷன் கடையில் தான் அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்...

முனியம்மா பையன் நல்லா படித்து அரசுத் துறையான நியாயவிலை கடையில் பணிக்கு அமர்த்தபட்டான்.

நியாய விலை கடையில் முதன் முதலில் அரிசி போடும் வாய்ப்பு கிடைத்தது

அரிசி வாங்குவதற்காக எல்லாரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள் அந்த வரிசையில் தர்மலிங்கமும் நின்று கொண்டிருந்தார். தர்மலிங்கத்துக்கு ஞாபகம் இல்லை இந்த பையன் யார் என்று. ஆனால் இந்த பையனுக்கு ஞாபகம் இருந்தது அன்று அம்மா சோறு வைத்து கொடுத்த தூக்க வாளியை பிடுங்கி வைத்துக் கொண்டவர் என்று....

அவரைப் பார்த்ததும் ஐயா வணக்கம் என்று சொன்னான் அவரும் வணக்கம்பா என்று மெதுவான குரலில் சொன்னார்....

ஐயா நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டான் முனியம்மா மகன்.... இல்லப்பா எனக்கு தெரியவில்லை என்று சொன்னார் தர்மலிங்கம்.

25 வருடத்திற்கு முன்னாடியே உங்க மகன் கல்யாணத்துக்கு எங்க அம்மா இலை நடக்க வந்தாங்க. அப்போது நான் பள்ளிக்கூடம் போகும்போது தூக்வாளியை கொடுத்து சோறு கேட்டேன் எங்க அம்மா சோறு போட்டு கொடுத்த போது நீங்கள் பிடுங்கி அதை கொட்டி விட்டீர்கள் என்று சொன்னான்

தர்மலிங்கத்துக்கு தான் செய்தது மறந்து போகுமா? என்ன அவர் ஒண்ணுமே பேசவில்லை.. அமைதியாக நின்று விட்டார்.

ஐயா உங்களுடைய ரேஷன் கார்டுக்கு அஞ்சு கிலோ அரிசி இது..... இந்த அஞ்சு கிலோ அரிசி நான் உங்களுக்கு கொடுக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க என்று சொன்னான்......

தர்மலிங்கத்துக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது

  • 34
  • More
Comments (0)
Login or Join to comment.