இன்றைய ராசி பலன்கள் - 7.11.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும்.புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.
சிம்மம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயலபடவும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உயர் அதிகாரிகளால் பொறுப்புக்கள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு